பால்கேன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, ரயில் சேவை, மாணவர் விடுதிகளுக்கு விலக்கு:மத்திய நிதியமைச்சர்
பால்கேன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, ரயில் சேவை, மாணவர் விடுதிகளுக்கு விலக்கு:மத்திய நிதியமைச்சர்
பால்கேன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, ரயில் சேவை, மாணவர் விடுதிகளுக்கு விலக்கு:மத்திய நிதியமைச்சர்
UPDATED : ஜூன் 22, 2024 07:48 PM
ADDED : ஜூன் 22, 2024 07:40 PM

புதுடில்லி: அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதிகள்,ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
புதுடில்லியில்ஜி.எஸ்.டி.கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிர்மலா கூறியதாவது:எஃகு,அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால்கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் அட்டைபெட்டி, சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
மாணவர்கள் விடுதிகளுக்கு விலக்கு
மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்க வேண்டும்.மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு
ரயில்நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை , பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, மற்றும் ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டுகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.