கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு
கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு
கள்ளச்சாராயம் சம்பவம்: வரும் 24 -ல் கவர்னர் ரவியை சந்திக்கிறது தமிழக பா,ஜ.,குழு
UPDATED : ஜூன் 22, 2024 09:10 PM
ADDED : ஜூன் 22, 2024 09:06 PM

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு மற்றும் பா.ஜ.வின் ஆய்வு குறித்து அறிக்கையை கவனர்னரிடம் அளிக்க உள்ளதாக தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: வரும் 24-ம் தேதி தமிழக பா.ஜ.,குழு தமிழக கவர்னர் ரவியை சந்திக்க உள்ளது. அப்போது கள்ளச்சாராய சாவு மற்றும் பா.ஜ.வின் ஆய்வு குறித்த அறிக்கையை கவனர்னரிடம் அளிக்க உள்ளது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கவர்னரிடம் தொலை பேசி வாயிலாக புகார் தெரிவித்து உள்ளேன்.
தமிழகம் முழுவதும் பா.ஜ.வின் போராட்டம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் , போதை பொருளை ஒழிக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும்.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.