கள்ளச்சாராயம் சம்பவம் : கவர்னர் ரவி மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பி வைப்பு
கள்ளச்சாராயம் சம்பவம் : கவர்னர் ரவி மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பி வைப்பு
கள்ளச்சாராயம் சம்பவம் : கவர்னர் ரவி மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பி வைப்பு
UPDATED : ஜூன் 22, 2024 09:40 PM
ADDED : ஜூன் 22, 2024 09:33 PM

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலியால், அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம், மரண ஓலங்கள் பார்ப்பவர்களை கலங்கடித்து விட்டன. 'தி.மு.க., அரசின் தோல்வி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் அதிகமாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழக கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த விஷயம் தொடர்பாக ஒரு ரகசிய அறிக்கை அனுப்பி உள்ளாராம். அதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்கப்பட்டு வந்தாலும், மாநில அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
தி.மு.க.,வினர் எப்படி இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர்; மேலும், அவர்களது விபரங்கள், கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் செயல்பாடுகள் என, அனைத்தையும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாராம் கவர்னர் ரவி.
இதனுடன் நிற்காமல், மதுபான ஆலை நடத்தி வரும், தி.மு.க., பிரமுகர்களின் பெயர்கள், அவர்களது நிறுவனங்கள் என, அனைத்து விபரங்களையும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளாராம் ரவி.
இன்னொரு பக்கம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இச்சம்பவம் குறித்து விபரமாக கடிதம் எழுதியுள்ளாராம். 'இந்த இரண்டு கடிதங்களில் உள்ள விபரங்களை வைத்து என்ன செய்யலாம்' என, உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்திவருகிறதாம்.மேலும், இது தொடர்பாக, 'சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்கிற மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது; அதையும் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறதாம்.'இந்த விவகாரத்தில் விரைவில் ஏதாவது நடவடிக்கை
டில்லியிலிருந்து நிச்சயம் இருக்கும்' என, கூறப்படுகிறது.