Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மழைக்கு 'மஞ்சள் அலெர்ட்'; 17 மாவட்டங்களில் உஷார்

மழைக்கு 'மஞ்சள் அலெர்ட்'; 17 மாவட்டங்களில் உஷார்

மழைக்கு 'மஞ்சள் அலெர்ட்'; 17 மாவட்டங்களில் உஷார்

மழைக்கு 'மஞ்சள் அலெர்ட்'; 17 மாவட்டங்களில் உஷார்

ADDED : ஜூன் 05, 2024 10:10 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு : மாநிலத்தின் 17 மாவட்டங்களில் இன்று முதல், ஐந்து நாட்களுக்கு, சூறாவளி காற்றுடன், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் இடி, பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன், பெங்களூரில் ஒரே நாள் இரவில் 11 செ.மீ., மழை பெய்து, பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, பெலகாவி, தார்வாட், கதக், ஹாவேரி, கொப்பால், விஜயபுரா, பல்லாரி, பெங்., ரூரல், பெங்., நகரம், கோலார், சிக்கபல்லாப்பூர், சிக்கமகளூரு, ஹாசன், மாண்டியா, ராம்நகர், ஷிவமொகா, துமகூரு ஆகிய 20 மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில், 17 மாவட்டங்களில், இடி, சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் உமாசங்கர், பெங்., மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், பெங்களூரில் கட்டுப்பாட்டு அறையில் நேற்று ஆய்வு செய்தனர்.

பொது மக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும்படியும், அவர்கள் உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us