ADDED : ஜூன் 05, 2024 03:11 AM

புதுடில்லி: மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதவில் , மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தை அடையும். ‛மொரீஷியஸ் -இந்தியா உறவு வாழ்க' என பதிவிட்டுள்ளார்.
நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் வெளியிட்ட பதவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பூடான் பிரதமர் ஷெ ரிங் டோப்கே வெளியிட்ட பதிவில் உலகின் மிகப்பெரிய தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த , அவருடன் பயணியாற்ற ஆவலோடு உள்ளேன் என தெரிவித்துள்ளார்.