பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?: காங்கிரஸ் கேள்வி
பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?: காங்கிரஸ் கேள்வி
பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?: காங்கிரஸ் கேள்வி
ADDED : ஜூன் 06, 2024 03:42 PM

புதுடில்லி: பீஹார், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியதாவது: 3வது முறையாக பிரதமர் ஆக உள்ள, மோடிக்கு 4 கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
ஏப்ரல் 30, 2014ம் ஆண்டு புனித நகரமான திருப்பதியில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்த வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்படுமா?. விசாகப்பட்டினம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை இப்போது நிறுத்துவீர்களா?.
சிறப்பு அந்தஸ்து
பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் உங்களின் 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியையும், உங்கள் கூட்டாளியான நிதிஷ் குமாரின் பத்தாண்டு கால கோரிக்கையையும் நிறைவேற்றுவீர்களா?. பீஹார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?. இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.