ஜூன் 9 மாலை பிரதமராக மோடி பதவி ஏற்கிறார்
ஜூன் 9 மாலை பிரதமராக மோடி பதவி ஏற்கிறார்
ஜூன் 9 மாலை பிரதமராக மோடி பதவி ஏற்கிறார்
UPDATED : ஜூன் 06, 2024 04:56 PM
ADDED : ஜூன் 06, 2024 03:23 PM

புதுடில்லி: பிரதமர் ஆக மோடி 3வது முறையாக பதவி ஏற்கும் விழா வரும் 9 ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணி 294 தொகுதிகளை கைப்பற்றியது. சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தேஜ கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து வரும் 8 ம் தேதி இரவு அவர் பிரதமர் ஆக 3வது முறையாக பதவியேற்பார் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பிரதமர் ஆக மோடி வரும் 9 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு பதவியேற்று கொள்ள உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.