வெற்றி பெறுவது யார்? ஆரூடம் கணித்த நாய்!
வெற்றி பெறுவது யார்? ஆரூடம் கணித்த நாய்!
வெற்றி பெறுவது யார்? ஆரூடம் கணித்த நாய்!
ADDED : ஜூன் 03, 2024 04:58 AM

மைசூரு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாளை நடக்கவுள்ள நிலையில், யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து, நாய் ஒன்று ஆரூடம் கணித்துள்ளது.
ஜூன் 4ம் தேதியை, நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். ஏழு கட்டங்களில் நடந்து முடிந்த, லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாளை நடக்கிறது. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என, நாளை தெரியும். ஏற்கனவே கருத்து கணிப்புகள் வெளியானது.
இதற்கிடையில் மைசூரில் நாய் ஒன்று, எந்த கட்சி வெற்றி பெறும் என, ஆரூடம் கணித்து உள்ளது. மைசூரின், கே.டி.ஸ்ட்ரீட்டின் கால பைரவேஸ்வரா கோவிலில் பைரவா என்ற நாய் உள்ளது. 2 வயதான இந்த நாயை கோபிநாத் என்பவர் வளர்க்கிறார். ஆரூடம் கணிப்பதில் பெயர் பெற்றதாகும்.
இம்முறை லோக்சபா தேர்தலில், யார் வெற்றி பெறுவர் என்பதை ஆரூடம் கணித்துள்ளது. நாயின் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் போட்டோக்களை வைத்த போது, மோடியின் போட்டோவை தொட்டு காண்பித்து, அவரே வெற்றி பெறுவார் என்பதை உணர்த்தியது.
அதேபோன்று மைசூரு லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் பா.ஜ.,வின் யதுவீர், காங்கிரசின் லட்சுமண் போட்டோவை வைத்த போது, யதுவீரின் படத்தை தொட்டு காண்பித்துள்ளது.
இது தொடர்பான, படங்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.