Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை

எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை

எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை

எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,விடம் விசாரணை

ADDED : ஜூன் 03, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு, : ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியான வழக்கு தொடர்பாக, அரகலகூடு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுவிடம், சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.

ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் சில பெண்களுடன், ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் கடந்த மாதம் 24 ம் தேதி, சமூக வலைதளங்களில் வெளியாயின. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்கின்றனர்.

இந்த வழக்கில் பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், காங்கிரஸ் பிரமுகர்கள் நவீன் கவுடா, சேத்தன், புட்டராஜ், சரத், ஹாசன் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா ஆதரவாளர்கள் லிகித் கவுடா, யரலுார் சேத்தன், பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜ்கவுடா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

லிகித் கவுடா, யரலுார் சேத்தன் முதலில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமினில் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, நவீன் கவுடா, சேத்தன் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர். தேவராஜ்கவுடாவும் சிறையில் உள்ளார்.

பிரஜ்வலின் ஆபாச வீடியோ வெளியாவதற்கு, சில நாட்களுக்கு முன்பு, நவீன் கவுடா தனது முகநுால் பக்கத்தில், எம்.பி., பிரஜ்வலின் ஆபாச வீடியோ வெளியாக, 'கவுன்ட்டவுன் ஸ்டார்ட்' என்று பதிவிட்டு இருந்தார்.

கெட்ட பெயர்


இதுகுறித்து நவீன் கவுடாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் இருந்த, பென்டிரைவ் வை, அரக்கலகூடு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுவிடம் கொடுத்ததாக கூறி உள்ளார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக மஞ்சுவுக்கு, ஹாசன் சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

நேற்று முன்தினம் இரவு, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், ஏ.எஸ்.ஐ., தம்மய்யா முன்பு, மஞ்சு ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மஞ்சு அளித்த பேட்டியில் கூறுகையில், ''நவீன் கவுடாவை யார் என்றே, எனக்கு தெரியாது. என் மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டி உள்ளனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். தேவகவுடா குடும்பத்தினரிடம், எனக்கு கெட்ட பெயர் வாங்கி தர முயற்சி நடக்கிறது,'' என்றார்.

அமைச்சர்


மஞ்சு முன்பு காங்கிரசில் இருந்தவர். சித்தராமையா அமைச்சரவையில் கால்நடை அமைச்சராக இருந்தவர். கடந்த 2018 தேர்தலில் தோற்ற பின்னர், பா.ஜ.,வில் இணைந்தார். 2019 லோக்சபா தேர்தலில், ஹாசனில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். பிரஜ்வல் செய்த வேட்புமனுவில், பல தகவல்கள் மறைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மஞ்சு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.,வில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்து, அரகலகூடில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us