கருத்து கணிப்புகள்: விஜயேந்திரா 'குஷி'
கருத்து கணிப்புகள்: விஜயேந்திரா 'குஷி'
கருத்து கணிப்புகள்: விஜயேந்திரா 'குஷி'
ADDED : ஜூன் 03, 2024 04:59 AM

பெங்களூரு: ''தேர்தல் கருத்து கணிப்பு நடத்திய, அனைத்து ஏஜென்சிகளும், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராவார் என்பதை, உறுதிப்படுத்தியுள்ளன,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என, கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் சில அரசியல் பண்டிதர்களின் கருத்து கணிப்புகளை, தலை கீழாக்கியுள்ளது.
எங்களின் எதிர்பார்ப்பின்படியே கருத்து கணிப்புகளும் உள்ளன. கர்நாடக மக்கள், மோடியை ஆதரித்துள்ளனர். எங்கள் தொண்டர்களின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. ஓட்டு வங்கி அடிப்படையிலான திட்டங்களுக்கு, வாக்காளர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி விஷயத்தில், கர்நாடக மக்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். கருத்து கணிப்பை விட, அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.