7வது சம்பள கமிஷன் எப்போது? அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றம்!
7வது சம்பள கமிஷன் எப்போது? அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றம்!
7வது சம்பள கமிஷன் எப்போது? அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றம்!
ADDED : ஜூன் 14, 2024 07:51 AM

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்களின், 7வது சம்பளம் கமிஷன் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காததால், ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள், மார்ச் 16ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை அமலில் இருந்தன. இதனால், மாநில அரசினால் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின், கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது.
தொடர்ந்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடந்தது. பல்வேறு துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
l வெவ்வேறு துறைகளின் பணிகளுக்கு டெண்டர் அழைக்க, ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், 94 பணிகளுக்கு டெண்டர் அழைக்கப்பட்டது. 19 பரிசீலனையில் உள்ளன. 18 க்கு பணி ஆணை வழங்கப்பட்டன. 57 பணிகளுக்கு டெண்டர் அழைக்க வேண்டி உள்ளது. பணிகளை உடனடியாக ஆரம்பிக்கும்படி உத்தரவு
l பெங்களூரு அரண்மனை மைதானத்தில், 2025 பிப்ரவரி 12 - 14 வரை, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 75 கோடி ரூபாய் நிதி வழங்கிய நிலையில், தற்போது கூடுதலாக 15 கோடி ரூபாய் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது
l உத்தர கன்னடா மாவட்டம், பட்கல்லில், 19 கோடி ரூபாயில், புதிய நீதிமன்ற கட்டடம் கட்டப்படும்
l மொத்தம் 46.48 கோடி ரூபாயில், 112 விரைவு பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
l தங்கவயலில் உள்ள தங்கச்சுரங்க கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால், அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்க ஒத்தி வைக்கப்பட்டது
l மாநில அரசு ஊழியர்களின், 7வது சம்பளம் கமிஷன் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
l மழை கால சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவது குறித்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 7வது சம்பளம் கமிஷன் அமல்படுத்துவது தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்காததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.