பொது இடங்களில் புதிதாக 'நமது கிளினிக்'
பொது இடங்களில் புதிதாக 'நமது கிளினிக்'
பொது இடங்களில் புதிதாக 'நமது கிளினிக்'
ADDED : ஜூன் 14, 2024 07:50 AM

பெங்களூரு: பஸ் நிலையங்கள் உட்பட பொது இடங்களில் நமது கிளினிக்குகள் துவக்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று அளித்த பேட்டி:
சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட பொது இடங்களில் 254 நமது கிளினிக்குகள் திறக்கப்படும்.
புதிய கிளினிக்குகள் துவக்க, இடங்களை அடையாளம் கண்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகாவில் 503 நமது கிளினிக்குகள் செயல்படுகின்றன.
இவற்றை மேலும் தரம் உயர்த்த வேண்டும். நடப்பாண்டு புதிதாக நமது கிளினிக்குகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.