Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பக்தனுக்காக உருவெடுத்த விஷ்ணு, சேஷா, சுப்பிரமணியர்

பக்தனுக்காக உருவெடுத்த விஷ்ணு, சேஷா, சுப்பிரமணியர்

பக்தனுக்காக உருவெடுத்த விஷ்ணு, சேஷா, சுப்பிரமணியர்

பக்தனுக்காக உருவெடுத்த விஷ்ணு, சேஷா, சுப்பிரமணியர்

ADDED : ஜூலை 29, 2024 08:35 PM


Google News
Latest Tamil News
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் குடுப்புவில் அமைந்துள்ளது ஸ்ரீஅனந்த பத்மநாபா கோவில். புராணங்களின்படி, ஒரு காலத்தில் 'கேதார்' என்ற பிராமண வேத அறிஞர் இருந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை.

துறவியின் ஆசிர்வாதம் கிடைத்தால் மட்டுமே, தனக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்று நினைத்தார். இதற்காக, அத்தகைய துறவியை தேடிச் சென்றார்.

இறுதியாக பெரிய காட்டின் நடுவில் உள்ள ஒரு சிறிய நதியான 'பத்ர சரஸ்வதி தீர்த்தம்' அருகே 'சிருங்கா முனி' என்ற துறவியை சந்தித்தார். தான் வந்த காரியத்தை, துறவியிடம் விவரித்தார்.

தீவிர தவம்


துறவியும், 'இங்கேயே தங்கி, உன் விருப்பங்களை நிறைவேற்றும் சுப்பிரமணியரை நினைத்து தவம் செய்' என்றார். அந்த இடத்தின் புனிதம், நதி பற்றியும் துறவி விளக்கினார்

துறவியன் ஆலோசனைபடி, அங்கேயே மனதை ஒருமுகப்படுத்தி, பக்தியுடன் தவம் செய்யத் துவங்கினார். தவத்தால் தன் சுற்றுப்புறத்தையும், தன்னையும் மறந்து, பல ஆண்டுகள் தவம் புரிந்தார்.

தவம் தீவிரமடைந்ததால், சுற்றுப்புறத்தில் ஒருவித வெப்பம் ஏற்பட்டது. இந்த வெப்பம் சொர்க்கம் வரை நீண்டது. இந்த வெப்பத்தை விலங்குகள், மனிதர்கள், தேவர்களால் தாங்க முடியவில்லை.

தேவர்கள் வேதனை


இதை பார்த்து வேதனை அடைந்த தேவர்கள், பிரம்மாவை பார்த்து நிலைமையை கூறினர். அவர், மஹா விஷ்ணுவிடம் முறையிட கூறினார். மஹா விஷ்ணுவிடம் முறையிட்டபோது, 'கேதார், சுப்பிரமணியரை நினைத்து தவம் செய்கிறார். எனவே, சுப்பிரமணியர் நினைத்தால் முடியும்' என்று கூறி, அவரை, மஹா விஷ்ணு சந்தித்தார்.

அதன்படி, சுப்பிரமணியரை சந்தித்து, கேதாரின் தவம் குறித்து விளக்கினார். ஆனால் கேதாரின் விதியில், 'குழந்தை பாக்கியம் இல்லை' என்றும், அவர் முக்திக்கு மட்டுமே தகுதியானவர் என்றும் கூறினார்.

ஆனாலும், மஹா விஷ்ணுவின் வேண்டுகோளின்படி, கேதார் முன் தோன்றிய சுப்பிரமணியர், குழந்தை வரம் கொடுத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த கேதார், சுப்ரமணியரை வணங்கி, பத்ர தீர்த்த நதியின் அருகில் தியானம் செய்தார்.

அதேவேளையில், கேதாரின் மனைவி, ஒரு பாம்பு முட்டையிடுவதை பார்த்து, பாம்புக்கு இருக்கும் குழந்தை பாக்கியம் தனக்கில்லையே என்று வேதனை அடைந்தார்.

மூன்று முட்டைகள்


ஓராண்டு கடந்தபோது, கேதாரின் மனைவி கர்ப்பம் அடைந்தார். குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த தம்பதிக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. கேதாரின் மனைவி, மூன்று முட்டைகளை ஈன்றார்.

இந்த முட்டைகளை 'மஹா விஷ்ணு, மஹா சேஷா, சுப்பிரமணியர்' ஆகியோரின் அவதாரம் என தேவர்கள் நினைத்து, மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் கேதார் மகிழ்ச்சி அடையவில்லை. கடும் தவத்துக்கு பின்னரும், குழந்தைக்கு பதிலாக முட்டையை கடவுள் வழங்கி உள்ளார் என்றால், இது கடந்த கால செயலின் விளைவே தவிர வேறில்லை.

அப்போது அவருக்கு 'அசரிரீ'யில், 'இந்த முட்டைகள் உலக நன்மைக்காக 'மஹா விஷ்ணு, மஹா சேஷா, சுப்பிரமணிய சுவாமி' ஆகியோரின் அவதாரம்.

கேதார் தவம் செய்த இடத்தில் முட்டைகளை நிறுவு. நதியில் குளிப்பவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனைத்து நோய், பாவங்களும் விடுபடும். புனித ஸ்தலத்தில் தங்கி அனந்த பத்மநாபரை (மஹா விஷ்ணுவின் மற்றொரு பெயர்) வணங்கி, வாழ்நாளின் முடிவில் முக்தி அடைவாய்' என அசரிரீ ஒலித்தது.

இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர், அந்த முட்டைகளை உள்ளூர் மொழியில் 'குடுப்பு' என்று அழைக்கப்படும் காட்டுப் புற்கள் நெய்யப்பட்ட ஒரு கூடையில் வைத்து, சுப்பிரமணியரை தியானித்த இடத்தில், மூன்று முட்டைகளை வைத்திருந்தார்.

தன் வாழ்நாள் முழுதும் அனந்த பத்மநாபரை தியானிப்பதில் காலம் கழித்து, முக்தியடைந்தார்.

இந்த இடத்தில் தற்போது ஒரு எறும்பு புற்று வளர்ந்து, அந்த இடம் 'ஸ்ரீ சேஷத்ர குடுப்பு' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அருகில் 'பத்ரா சரஸ்வதி தீர்த்தம்' என்ற சிறிய நதி ஓடுகிறது.

தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். டிசம்பர் மாதத்தில் இக்கோவிலில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

மெர்கரா சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில், நுாற்றுக்கணக்கான நாகர் சிலைகள் உள்ளன. ஸ்ரீ தேவி, கணபதி, சுப்பிரமணியர், ஜெயா - விஜயா ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

30_Article_0001, 30_Article_0002, 30_Article_0003, 30_Article_0004

செல்வது?

பெங்களூரில் இருந்து விமானம் மூலம், மங்களூரு சர்வதேச விமான நிலையம் சென்றடையலாம். அங்கிருந்து பஸ், டாக்சி, கேப்களில் செல்லலாம். ரயிலில் செல்வோர், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், கேப், ஆட்டோவில் செல்லலாம். இக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.



பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மஹா விஷ்ணு, மஹா சேஷா, சுப்பிரமணியர். (2வது படம்) கோவிலில் உள்ள நுாற்றுக்கணக்கான நாகர் சிலைகள். (3வது படம்) கோவில் வளாகத்தில் உள்ள 'பத்ரா சரஸ்வதி தீர்த்தம்'. (கடைசி படம்) ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவில்.

1.பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மஹா விஷ்ணு, மஹா சேஷா, சுப்பிரமணியர். 2. கோவிலில் உள்ள நுாற்றுக்கணக்கான நாகர் சிலைகள். 3. கோவில் வளாகத்தில் உள்ள பத்ரா சரஸ்வதி தீர்த்தம்.

செல்வது?

பெங்களூரில் இருந்து விமானம் மூலம், மங்களூரு சர்வதேச விமான நிலையம் சென்றடையலாம். அங்கிருந்து பஸ், டாக்சி, கேப்களில் செல்லலாம். ரயிலில் செல்வோர், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், கேப், ஆட்டோவில் செல்லலாம். இக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.



செல்வது?

பெங்களூரில் இருந்து விமானம் மூலம், மங்களூரு சர்வதேச விமான நிலையம் சென்றடையலாம். அங்கிருந்து பஸ், டாக்சி, கேப்களில் செல்லலாம். ரயிலில் செல்வோர், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், கேப், ஆட்டோவில் செல்லலாம். இக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us