வாசன் கண் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் சாதனை
வாசன் கண் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் சாதனை
வாசன் கண் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் சாதனை
ADDED : மார் 12, 2025 05:49 AM

ராஜாஜி நகர்; ஏழு முறை கண் அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்காத வெளிநாட்டு நபருக்கு, ராஜாஜி நகர் வாசன் கண் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்குப் பின் பார்வை கிடைத்தது.
பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில், அண்மையில் நிறுவப்பட்ட அதிநவீன 'ரெட்டினா லேசர் மிஷின்' குறித்து, இயக்குனர் சுந்தரமுருகேசன் முன்னிலையில், கண் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் தேவஷிஷ் துபே, கண்ணில் ஏற்படும் ஒளி விலகல் பிரச்னையை சரி செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர் தேவிகா ஆகியோர் அளித்த பேட்டி:
சூடான் நாட்டை சேர்ந்த 45 வயது நபருக்கு பார்வை குறைபாடு இருந்தது. அவருக்கு ஏழு முறை கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், பார்வை கிடைக்கவில்லை. அவருக்கு ராஜாஜி நகர் வாசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்தோம். அவருக்கு பார்வை கிடைத்தது.
மருத்துவமனையில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரெட்டினா லேசர் மிஷின், கண்களில் லேசர் ஒளியை பாய்ச்சி, கண் விழித்திரையில் உள்ள நரம்புகளை செயல்பட வைக்கும். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது. சிகிச்சைக்கு பின், 4 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் குணமடைவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.