Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வால்மீகி ஆணைய வழக்கு அமித் ஷாவுக்கு எத்னால் கடிதம்

வால்மீகி ஆணைய வழக்கு அமித் ஷாவுக்கு எத்னால் கடிதம்

வால்மீகி ஆணைய வழக்கு அமித் ஷாவுக்கு எத்னால் கடிதம்

வால்மீகி ஆணைய வழக்கு அமித் ஷாவுக்கு எத்னால் கடிதம்

ADDED : ஜூன் 03, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து, சி.பி,ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, மத்திய அரசிடம், பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் முறையிட்டுள்ளார்.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, எத்னால் எழுதிய கடிதம்:

கர்நாடக காங்கிரஸ் அரசில், ஊழல் நடத்த ஒத்துழைக்கும் படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் நேர்மையான அதிகாரிகள், தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடந்த 2019 அக்டோபரில் பரமேஸ்வரின் அந்தரங்க உதவியாளர், பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில், தற்கொலை செய்து கொண்டார். 2016 ஜூலையில், ஜார்ஜ் பெயரை கூறிவிட்டு டெபுடி எஸ்.பி., கணபதி தற்கொலை செய்து கொண்டார்.

நடப்பாண்டு மே மாதம், கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் கவுடர் தற்கொலை செய்து கொண்டார். இப்போது வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆணையத்தின் 88.62 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யும்படி, அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த அழுத்தத்தால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், 88.62 கோடி ரூபாய் பண பரிமாற்றம் விதிமீறலானது என, யூனியன் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வங்கி புகார் அளித்துள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us