Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 2.84 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி மத்திய அமைச்சர் ஆவாரா குமாரசாமி?

2.84 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி மத்திய அமைச்சர் ஆவாரா குமாரசாமி?

2.84 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி மத்திய அமைச்சர் ஆவாரா குமாரசாமி?

2.84 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி மத்திய அமைச்சர் ஆவாரா குமாரசாமி?

ADDED : ஜூன் 05, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு:கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் குமாரசாமி; முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகன்.

முன்னாள் முதல்வரான இவர், சென்னப்பட்டணா எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறார்.

இம்முறை பா.ஜ., கூட்டணியுடன் மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் தரப்பில் தொழிலதிபர் வெங்கடரமணே கவுடா களமிறக்கப்பட்டார்.

நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, முதல் சுற்றில் இருந்து, இறுதி சுற்று வரை, குமாரசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி, 2,84,620 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன், டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க டில்லி வரும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மாலை குமாரசாமியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us