சிக்கமகளூரில் குவிந்த சுற்றுலா பயணியர் சாலையில் நடனமாடியதால் வாகன நெரிசல்
சிக்கமகளூரில் குவிந்த சுற்றுலா பயணியர் சாலையில் நடனமாடியதால் வாகன நெரிசல்
சிக்கமகளூரில் குவிந்த சுற்றுலா பயணியர் சாலையில் நடனமாடியதால் வாகன நெரிசல்
ADDED : ஜூலை 15, 2024 05:41 AM

சிக்கமகளூரு : பருவமழையால், சிக்கமகளூரு முல்லையங்கிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணியரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போதும், இளைஞர்கள் - இளம் பெண்கள், 'ரீல்ஸ்' செய்து, சுற்றுலா பயணியரை கடுப்பாக்கினர்.
கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால், மாநிலம் முழுதும் குளுமையான சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம் முல்லையங்கிரி மலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகை காண, வார விடுமுறை நாளான நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் குவிந்தனர்.
மலையில் தவழ்ந்து செல்லும் பனி மூட்டத்தை பார்த்த சுற்றுலா பயணியர், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, 'செல்பி', 'ரீல்ஸ்' எடுத்து கொண்டனர்.
இதனால், மலைக்கு செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போதும், 'ரீல்ஸ்' மோகம் கொண்ட சில இளைஞர்கள் - இளம் பெண்கள் பட்டாளம், பாடல் ஒலிக்க விட்டு குத்தாட்டம் போட்டனர்.
தொடர் மழையால், நீர்வீழ்ச்சிகளை காணவும் சுற்றுலா பயணியர் படையெடுத்தனர். முல்லையங்கிரி, தத்தபீடம் உட்பட பல சுற்றுலா தலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் குவிந்தனர். நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.