பத்ரா அணையில் மூழ்கி மூன்று வாலிபர்கள் பலி
பத்ரா அணையில் மூழ்கி மூன்று வாலிபர்கள் பலி
பத்ரா அணையில் மூழ்கி மூன்று வாலிபர்கள் பலி
ADDED : ஜூன் 20, 2024 05:56 AM
சிக்கமகளூரு: பத்ரா அணையில் மூழ்கி, மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.
ஷிவமொகா டவுனில் வசித்தவர்கள் அல்தாப் கான், 25, அதில், 24, சஜித், 23. நண்பர்களான மூன்று பேரும் நேற்று மதியம், ஒரு காரில் சிக்கமகளூரு என்.ஆர். புராவில் உள்ள,பத்ரா அணைக்கு சுற்றுலா சென்றனர்.
அணையின் பின்பக்கபகுதிக்கு சென்று காரை நிறுத்தினர். அணையில் இறங்கி குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் அணையில் மூழ்கி இறந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த என்.ஆர். புரா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மூன்று பேரின் உடல்களை தேடும்படி நடந்தது. ஆனால், நேற்று உடல்கள் சிக்கவில்லை. இன்று இரண்டாவது நாளாக தேடும் பணி நடக்க உள்ளது.