Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கெம்பே கவுடா விழாவில் 15 ஒக்கலிகர்களுக்கு விருது

கெம்பே கவுடா விழாவில் 15 ஒக்கலிகர்களுக்கு விருது

கெம்பே கவுடா விழாவில் 15 ஒக்கலிகர்களுக்கு விருது

கெம்பே கவுடா விழாவில் 15 ஒக்கலிகர்களுக்கு விருது

ADDED : ஜூன் 20, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
தங்கவயல்: தங்கவயலில், கெம்பே கவுடா ஜெயந்தி விழா ஏற்பாடுகள் குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், ஒக்கலிகர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். ஜூன் 26ம் தேதி கெம்பே கவுடா ஜெயந்தி விழாவை, கர்நாடக கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேர் திருவிழாவாக கொண்டாடவும், அதில், நகராட்சி சார்பில் ஒரு தேர், தாலுகா அலுவலகம் சார்பில் ஒரு தேர் என இரண்டு தேர்களை அலங்கரித்து பவனி கொண்டு வரவும், பல்வேறுதுறைகளில் சாதனை படைத்தஒக்கலிகர்கள் 15 பேருக்கு விருது வழங்கி சிறப்பிக்கவும்,தீர்மானிக்கப்பட்டது.

விழாவில் தங்கவயல் தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார், அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் நரசிம்ம மூர்த்தி, வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா, ஒக்கலிகர் சங்கத்தின்லட்சுமி நாராயணா உட்பட பலர் பங்கேற்றனர்.

19.6.2024 / ஜெயசீலன்

20_DMR_0007

தங்கவயலில், கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரூபகலா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. இடம்: மினி விதான் சவுதா, ராபர்ட் சன் பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us