ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 05:54 AM

தங்கவயல்: '-மூட்டை லக்கேஜ்கள் போல பள்ளி மாணவர்களை ஏற்றிசென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கைவிடுத்தனர்.
தங்கவயலில்,மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு, போலீஸ் எஸ்.ஐ.,க்கள்நேற்றுவிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆண்டர்சன் பேட்டை எஸ்.ஐ., சந்திரசேகர், செயின்ட் மேரீஸ் பள்ளி அருகிலும்; உரிகம் எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்திசெயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் வில்லியம் ரிச்சர்ட்ஸ்பள்ளி அருகிலும்; பெமல் எஸ்.ஐ.,வித்யாஸ்ரீ பெமல் நகர் பள்ளி அருகிலும்; கேசம்பள்ளி எஸ்.ஐ., தேவராஜ், அரசுப் பள்ளி அருகிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பேத்தமங்களா எஸ்.ஐ., குருராஜ் சிந்தக்கல், சுந்தரபாளையா அரசு பள்ளி அருகிலும்; பங்கார்பேட்டை எஸ்.ஐ., கோபால், அஷ்லே பள்ளி அருகிலும்; பூதிக்கோட்டை எஸ்.ஐ., சுனில், பூதிக்கோட்டை அரசு பள்ளி அருகிலும்; ராபர்ட்சன் பேட்டை எஸ்.ஐ., மாலா, செயின்ட் தெரேசா பள்ளி, மற்றும் காந்தி சதுக்கம் அருகிலும்; காமசமுத்ரா எஸ்.ஐ.,கிரண்குமார் காமசமுத்ராபஸ் நிலையம் அருகிலும்,ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரை கூறினர்.
'அதிகமான மாணவர்களை லக்கேஜ் மூட்டைகள் போல அடுக்கி, தொங்கும்படி செய்துஇயக்க கூடாது. அளவுக்கு அதிகமான மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றால்அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம்' என்பதை எஸ்.ஐ.,க்கள் உணர்த்தினர்.
20_DMR_0006
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களின் எஸ்.ஐ.,க்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.