
பட்டா பதிவு எப்போது?
'கோல்டு மைன்ஸ்' முன்னாள் தொழிலாளர்கள் குடியிருக்கும் 2,800 வீடுகளுக்குஉடைமை சான்றிதழ் கொடுத்தாங்க. அதுக்கு பட்டா பதிவு இல்லை. பட்டா பதிவு செய்து கொடுக்க எவ்விதஉத்தரவாதமும் மாநில வருவாய்த் துறையிடம் இருந்து பெற்றுத் தரவும் இல்லை.
தியாகிகளுக்கு அவமரியாதை!
தேசப் பிதா சிலையை சுதந்திர போராட்ட தியாகிகளால் நிறுவப்பட்டதன் அடையாளமாக கல்வெட்டு பதித்தனர். சிலை உடைந்து பழுதடைந்த நேரத்தில்,அதனைமாற்றியபோது கல்வெட்டையும்அகற்றினர். மீண்டும் அந்த கல்வெட்டை பதிக்கவே இல்லை.சுதந்திரபோராட்ட தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்வதா. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி முன் வரவில்லை.தேசப் பிதா சிலையை நிறுவிய தியாகிகளை அவமதிக்கின்றனரே என பலரும் வருத்தத்தில் இருக்காங்க.
ஆபீசர்கள் கூட்டம் நடத்தலாமா?
கோல்டன் சிட்டி தொகுதி அசெம்பிளி மேடம் வீட்டில் முனிசி., அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தலாமா. அசெம்பிளி மேடம் வீடு அரசு இல்லமாக எப்போது மாறியது? அங்கு ஆபீசர்கள் கூட்டம் நடத்தலாமா. இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு புதியசெங்கோட்டைக் காரர்தனது பவரை காட்டியுள்ளார்.
வீட்டு மனைகள் எங்கே?
வீடற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அஜ்ஜிப்பள்ளி பக்கத்தில் தரிசு நிலத்தை குடிசை மாற்று வாரியத்தார்ஒதுக்கினாங்க. இதுக்கு மாவட்ட நிர்வாகமும் ஒப்புதல் கொடுத்தாங்க. இதனால், பயனாளிகள் வீடுகள் கட்ட பூஜைகளும் போட்டாங்க.