Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கள்ளக்காதலில் போட்டி அண்ணனை கொன்ற தம்பி

கள்ளக்காதலில் போட்டி அண்ணனை கொன்ற தம்பி

கள்ளக்காதலில் போட்டி அண்ணனை கொன்ற தம்பி

கள்ளக்காதலில் போட்டி அண்ணனை கொன்ற தம்பி

ADDED : ஜூலை 21, 2024 07:30 AM


Google News
நெலமங்களா: திருமணமான ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைப்பதில் சகோதரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அண்ணனை தம்பி கொலை செய்தார்.

பெங்களூரு, நெமலங்களாவின் மணல்குன்டே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ், 25. இவரது சகோதரர் நவீன், 22. இருவரும், வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர்.

இருவருக்கும் எல்கியாதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது.

அவருடன் தகாத உறவில் ஈடுபடுவதில், சகோதரர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 18ம் தேதி நவீன், தனது அண்ணன் நாகேசுக்கு போன் செய்து, எல்கியாதனஹள்ளி கிராமத்துக்கு வரவழைத்தார். அங்கு சென்ற நாகேசும், நவீனும் மது குடித்து உள்ளனர்.

அப்போது மீண்டும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோபடைந்த நவீன், நாகேசை தாக்கி கீழே தள்ளி, அவரின் மார்பில் கத்தியால் குத்தினார். பின் ஆம்புலன்சுக்கு போன் செய்து, நவீன் தகவல் கூறினார்.

ஆம்புலன்ஸ் அங்கு வருவதற்குள், நாகேஷ் இறந்துவிட்டார். இது தொடர்பாக, விசாரணை நடத்திய தாபஸ் நகர் போலீசார், நவீனை, நேற்று கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us