ADDED : ஜூன் 07, 2024 07:20 AM
புரோக்கர்கள் அட்டகாசம்!
ரேஷன் கார்டுடன் 'ஜாதி' சான்றிதழ் இணைக்க வேணுமுன்னு அரசு உத்தரவு வந்திருப்பதால், குடும்ப தலைவியர் கூட்டம், மினி விதான் சவுதாவில் அதிகரிக்குது. 'ரிஸ்க்' இல்லாமல் வீடு தேடி கொண்டு வந்து தரணுமுன்னா 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை புரோக்கர்கள் பேரம் பேசி பறிக்குறாங்க.
இந்த புரோக்கர்கள் மூலம் செல்லும் விண்ணப்பங்கள் ரிஜெக்ட் ஆகாமல் 'ஓகே' ஆகிறது. புரோக்கர்கள் இல்லாமல் செல்லும் விண்ணப்பங்களுக்கு பாட்டன், முப்பாட்டன், பூட்டன் சர்டிபிகேட்டுகளை அத்தாட்சியாக கேட்குறாங்க.
ஏன்னா கோல்டு சிட்டியில் தான் பெரும்பாலான போலி ஜாதி சான்றிதழ்கள் புழக்கத்தில் இருக்குதாம். முனிசி., தேர்தலில் போலி சான்றிதழ் தாக்கல் செய்து கவுன்சிலர் ஆனவங்க கதை இப்பவும் கோர்ட்டில் வழக்கு தொங்குது. போலி ஜாதி சான்றிதழுக்கு புரோக்கர்கள் விண்ணப்பங்களை சரி பார்க்க தவறினால் விபரீதம் ஏற்பட போகுதுன்னு வட்டார தகவல்கள் தெரிவிக்குது.
ஸ்டெடியாகும் புல்லுக்கட்டு!
பொன்னான சிட்டிக்குள் அடையாளம் தெரியாமல் இருந்த புல்லுக்கட்டு கட்சிக்கு, புது கோலார் எம்.பி.,யால் துளிர் விட தொடங்கிடுச்சு. அடுத்த அசெம்பிளி தேர்தலுக்கு இப்பவே சீட் கேட்டு உறுதிபடுத்த போறாங்க. கோலார் மாவட்டத்தில் ரெண்டு தொகுதி மட்டுமே புல்லுக்கட்டு பக்கம் இருந்ததை ரெட்டிப்பாக்க போறாங்களாம்.
புது எம்.பி.,க்கு குடும்ப உறவுக்காரர்களை பொன்னான சிட்டிக்குள் எம்.எல்.ஏ., ஆக்கலாம்னு ஐடியா இருப்பதாக தெரியுது. ஏன்னா இந்த தொகுதிக்கு தான் 'ஈஸி' தொகுதியாக இருக்குதாம். எனவே இத்தொகுதியில் அதிகளவு செங்கோட்டைக்காரரின் நடமாட்டம் இருக்க போகுதாம்.
சட்டவிரோத காஸ் விற்பனை!
சட்ட விரோதமாக சமையல் காஸ் சிலிண்டரில் இருந்து, ஆட்டோக்களுக்கு எரிப்பொருள், 'ரி பில்லிங்' வியாபாரம் செய்து வராங்க. மாரி குப்பத்தில் உணவு பொது வினியோகத் துறை உதவி டைரக்டர் திடீர் சோதனை நடத்தினாரு. ஏராளமான சிலிண்டர்களை பறிமுதல் செய்தாரு.
இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஆனால் இதுபோல எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் அரசு அனுமதி இல்லாமல், முறைகேடாக பல இடங்களில் விற்பனை தர்பார் இப்பவும் நடக்குது.
மாதந்தோறும் இவர்கள் கப்பம் கட்ட வேண்டியவர்களுக்கு கட்டுவதால் இந்த பிஸ்னசை யாராலும் ஒன்னுமே செய்ய முடியாதுன்னு தெனாவட்டு பேசுறாங்களாம். இந்த வியாபாரத்துக்கு மட்டும் எப்படி நுாற்றுக்கணக்கான சமையல் காஸ் கிடைக்கிறதோ.
தேர்தல் பணம் பதுக்கல்!
ப.பேட்டையில் ஓட்டு குறைந்ததற்கு மக்கள் முடிவு, அதை யாரும் ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு அதன் அசெம்பிளிகாரர் நியாயத்தை சொல்லி இருக்கிறார். மற்ற தொகுதிகளை விட அதிகமா 2 சி கேட்டு வாங்கியவர், அந்த தொகையை வீட்டுக்குள் கொண்டு போய் அமுக்கி கொண்டாராம். ரிசல்ட்டுக்கு பின் அது மக்கள் முடிவு என்று சொல்லலாமா. இது எந்த வகை நியாயம்?
தோல்விக்கான காரணங்களை, உள்குத்து பற்றிய தகவல்களை, பக்கம் பக்கமாக பட்டியலிட்டு தயார் படுத்தி இருக்காராம், 'கை'யின் தோல்வி கண்ட வேட்பாளர்.
தேர்தல் பணம் பதுக்கல்!