ADDED : ஜூன் 07, 2024 07:20 AM
குஷியோ குஷி!
தேசிய அரசியல்ல ராஜாங்கம் பண்ணிகிட்டு இருந்த கோலாரு முனி, இப்போ மாநில அரசியல்ல அமைச்சரா இருக்காரு. லோக்சபா தேர்தல்ல கோலார்ல போட்டியிட மருமகனுக்கு 'சீட்' கேட்டாரு. எதிர் கோஷ்டி ஒண்ணு சேர்ந்து, சீட் கிடைக்க விடாம பண்ணுனாங்க. முனிய ஓரம் கட்டவும் ஆரம்பிச்சாங்க. ஆனா இப்போ கட்சி அறிவிச்ச, வேட்பாளரு தோத்து போயிருக்காரு. இதனால முனிக்கு குஷியோ குஷியாம். நான் சொல்றது கேட்டு, என்னோட மருமக புள்ளைக்கு சீட் கொடுத்து இருந்தா ஜெயிச்சி இருக்கலாம். நான் இல்லாம கோலாரு அரசியலான்னு மார்தட்டிட்டு வர்றாராம்.
'அப்செட்'டில் ரெட்டி!
தாமரை கட்சியில இருந்து பல வருஷமா, கனிம வழக்குல சிக்குன ரெட்டிய தள்ளியே வைச்சு இருந்தாங்க. லோக்சபா தேர்தல் நேரத்துல, அவர கட்சியில கொண்டு வந்தாங்க. கொப்பால், ராய்ச்சூர், பல்லாரியில நான் தான் ராஜா. தாமரை கட்சி வேட்பாளர்கள ஜெயிக்க வைக்குறேன்னு சொல்லிட்டு சுத்துனாரு ரெட்டி. ஆனா அந்த 3 தொகுதியிலும், கை கட்சி ஜெயிச்சி இருக்கு. இதனால ரெட்டி, ரொம்ப அப்செட்ல இருக்காராம். தாமரை கட்சி நம்ம மேல வைச்ச நம்பிக்கைய காப்பாத்த முடியாம போச்சேன்னு, மனசுக்குள் வேதனைப்பட்டு இருக்காரு.
பேரனை நினைத்து கவலை!
லோக்சபா தேர்தல்ல மகனும், மருமவனும் அதிக ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாலும், தொட்டகவுடரால சந்தோஷமாக இருக்க முடியல. பேரன் பிரஜ்வலு தோத்து போனதுனால கவலையில இருக்காரு. பல ஆண்டுகளாக பாரம்பரியமா இருந்த ஹாசன் தொகுதிய, இழந்துட்டோமேன்னு மனசுக்குள்ள குமுறிட்டு இருக்காராம். இத பத்தி தெரிஞ்சிகிட்ட, ஹாசன் புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள், தொட்டகவுடா கிட்ட, 'கவலைப்படாதீங்க. அடுத்த தேர்தல்ல தொகுதிய மீட்போம்'னு சொல்லி இருக்காங்க. தொகுதிய மீட்க சபதமும் எடுத்து இருக்காங்களாம்.