பிரசாரத்திற்கு அழைக்காத அமைச்சர் சதீஷ் மீது காங்., - எம்.எல்.ஏ., புகார்
பிரசாரத்திற்கு அழைக்காத அமைச்சர் சதீஷ் மீது காங்., - எம்.எல்.ஏ., புகார்
பிரசாரத்திற்கு அழைக்காத அமைச்சர் சதீஷ் மீது காங்., - எம்.எல்.ஏ., புகார்
ADDED : ஜூன் 07, 2024 07:20 AM

பெலகாவி: ''பிரசாரத்திற்கு என்னை அழைக்கவில்லை,'' என்று, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மீது, குடச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகேந்திர தம்மண்ணவர் புகார் கூறினார்.
லோக்சபா தேர்தலில் சிக்கோடியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட, பொதுப் பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மகள், பிரியங்கா வெற்றி பெற்றார்.
ஆனாலும் திருப்தி அடையாத சதீஷ் ஜார்கிஹோளி, அதானி, குடச்சி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமண் சவதி, மகேந்திர தம்மண்ணவர் சரியாக பணியாற்றவில்லை என்று, வெளிப்படையாக கூறினார்.
அரசியலுக்கு புதியவன்
இதுகுறித்து எம்.எல்.ஏ., மகேந்திர தம்மண்ணவர் நேற்று அளித்த பேட்டி:
சிக்கோடி வேட்பாளர் பிரியங்காவை ஆதரித்து, மூன்று நாட்கள் பிரசாரம் செய்தேன்.
அதன்பின்னர் பிரசாரத்திற்கு வரும்படி, சதீஷ் ஜார்கிஹோளி என்னை அழைக்கவில்லை. என்னிடம் பேசவும் இல்லை. இதனால் நான் பிரசாரத்திற்கு செல்லவில்லை.
ஆனாலும் எனது தொகுதியில் இருந்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு 23,000 ஓட்டுகள், அதிகம் வாங்கி கொடுத்து உள்ளேன். நான் அரசியலுக்கு புதியவன். முதல்முறை எம்.எல்.ஏ., ஆகி உள்ளேன்.
இதனால் என் மீது குற்றச்சாட்டு எழலாம். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. கட்சி கொடுத்த வேலையை செய்கிறேன். நான் காங்கிரசில் எந்த அணியிலும் இல்லை.
ஏதாவது செய்வேன்
சதீஷ் ஜார்கிஹோளி பொதுப்பணி அமைச்சராக உள்ளார். எனது தொகுதியில் செய்ய வேண்டிய, பணிக்காக அவரை சந்திப்பேன். வளர்ச்சி பணி செய்வதற்கு தான், அரசியலுக்கு வந்து உள்ளேன்.
வாக்குறுதி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், வளர்ச்சி பணிகள் செய்வதில் சிரமம் உள்ளது. எனது எம்.எல்.ஏ., பதவி முடிய, இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் எனது தொகுதிக்காக ஏதாவது செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.