ADDED : ஜூன் 17, 2024 04:20 AM
புகார் சொல்ல காத்திருப்பு!
பொன்னான நகராட்சியில் கடந்த 15 மாதங்களில் நடந்த டெவலப்மென்ட் வேலைகள் பூஜ்யம் என்பதே வார்டு பிரதிநிதிகளோட அபிப்ராயம். முனிசி., ஆபீசர்கள் யாருமே, வார்டுகளின் வளர்ச்சி பணிகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்று, தொகுதி அசெம்பிளி மேடத்திடம் புகார் செஞ்சாங்க.
ஆபீசர்களுக்கு மேடம் புத்தி சொல்வாங்கன்னு நம்புறாங்களாம். கவுன்சிலர்கள், அதிகாரிகள் இணைந்த கூட்டத்தை நடத்த வேணும் என்பது தான் அவங்க எதிர்பார்ப்பு. அசெம்பிளி மேடத்தை அணுகுவதை போல மாவட்ட பொறுப்பு அமைச்சர், கலெக்டரை அணுகி ஆபீசர்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வேணுமாம். கூட்டம் நடத்தி நடக்கிற முறைகேடுகளை புட்டு புட்டு வைக்க காத்திருக்காங்க.
இதுக்கு பதில் இருக்கா?
கோர்ட் வழக்கு விவகாரமாக யாரிடமும் சல்லிக் காசும் வாங்கலயாம். வழக்குக்காக யாரும் பணத்தை கொடுக்க வேணாமாம். முன்னாள் தொழிலாளி ஒருத்தரு, பாராட்டு மேடையில வறட்டு ஜம்பத்தில் கூவினாரு.
முன்னாள் தொழிலாளியாகவோ, ஆபீசராகவோ, கோல்டு மைன்ஸ் வாரிசாகவோ இல்லாத ஒருத்தரு, பூ கட்சிக்காரராக தன்னை அடையாளம் படுத்திக் கொண்டவரு நிதியுதவி கொடுத்ததை ஏன் வாங்கினாங்கன்னு தெரியலயே. எந்த கட்சிக்கும் சம்பந்தமே இல்லாத தொழிற்சங்கம்னு சொன்னவங்க, பூ கட்சி பிரமுகரை பேண்டு வாத்தியம் முழங்க எதுக்காக வரவேற்றாங்க. அந்த கூட்டத்துக்கு அசெம்பிளி மேடத்தை ஏன் அழைக்கலன்னு, அவங்க விசிறிகள் கேட்குறாங்க. இதுக்கு யார் பதில் தருவாங்க.
அறுவை சிகிச்சை மோசடி?
தெரு நாய்கள் இன பெருக்கத்தை தடுக்க அறுவை சிகிச்சை செய்வதாக, டெண்டர் விடாமல், ஒருவரிடம் ஒப்பந்தம் செஞ்சாங்க. நான்கைந்து தெரு நாய்களுக்கு மயக்க ஊசி செலுத்தி கருத்தடை ஆப்பரேஷன் செய்ததாக காட்டிக்கிட்டாங்க.
சிட்டி முழுதும் மொத்த தெரு நாய்கள் எத்தனை. இவைகளில் அறுவை சிகிச்சை செய்தவை எத்தனை. இதன் கணக்கு விபரம் யாரிடம் இருக்குமென தெரியல. 35 வார்டுகளில் 5 வார்டிலாவது, தெரு நாய்களுக்கு முழுமையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா. உ.பேட்டையில் குழந்தையை கடித்து குதறியுள்ளது. இதுக்கு தானா, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினாங்க.இருந்திடுவாரான்னு பலரும் கேட்கிறாங்க.