ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்
ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்
ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்
ADDED : ஜூன் 17, 2024 04:20 AM

- நமது நிருபர் -
மதுரையில் இருந்து பெங்களூருக்கு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் திருச்சிக்கு காலை, 7:15க்கு செல்கிறது.
அங்கிருந்து, 7:20 மணிக்கு புறப்பட்டு காலை, 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு, 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம், 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷன் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம், 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு, 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை, 5:15 மணிக்கு நடக்கிறது.
இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில் நிறுத்தம் இல்லை. மேலும், திருச்சியை சுற்றி செல்வதால் துாரம், 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும், கட்டணமும் அதிகம் உள்ளது. எனவே, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.
மதுரை - பெங்களூரு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும். இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான திண்டுக்கல், ஓசூரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.