சுதாகர் - பிரதீப் ஈஸ்வர் மோதல் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்
சுதாகர் - பிரதீப் ஈஸ்வர் மோதல் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்
சுதாகர் - பிரதீப் ஈஸ்வர் மோதல் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்
ADDED : ஜூன் 17, 2024 04:20 AM

சிக்கபல்லாபூர் : விழாக்களில் எம்.பி.,யை அழைக்க வேண்டும் என்ற விஷயத்தில், சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரரை நினைத்து, அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.
சிக்கபல்லாபூர் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனவர் சுதாகர்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தனது சொந்த ஊரான பைரே சந்திராவை சேர்ந்தவரும், காங்கிரஸ் வேட்பாளருமான பிரதீப் ஈஸ்வரிடம் தோல்வி அடைந்தார். முதல் முறை வெற்றி பெற்ற ஆணவத்தில், சுதாகரை வாய்க்கு வந்தபடி, பிரதீப் ஈஸ்வர் பேசி வந்தார்.
சுதாகர் அபாரம்
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக சுதாகர் போட்டியிட்டார். சுதாகரை தோற்கடிப்போம் என பிரதீப் ஈஸ்வர் சூளுரைத்தார். ஆனாலும், சுதாகர் அபார வெற்றி பெற்றார்.
சுதாகர் வெற்றி பெற்று இருப்பதால், சிக்கபல்லாபூரில் அரசியல் மோதல் துவங்கியுள்ளது. இருவரின் ஆதரவாளர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிக்கபல்லாபூர் தொகுதியில் நடக்கும், வளர்ச்சி திட்ட துவக்க பணிகளுக்கு எம்.பி., என்ற முறையில் சுதாகருக்கு, பிரதீப் ஈஸ்வர் அழைப்பு விடுக்க வேண்டும். இதுதான் மரபு.
அந்த மரபை, பிரதீப் ஈஸ்வர் கடைப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் கடைப்பிடிக்கா விட்டால், சுதாகரும் அமைதியாக இருக்க மாட்டார். வளர்ச்சிப் பணிகள் துவக்க விழாவுக்கு அழைப்பிதழ் அடிக்கும் பொறுப்பை அதிகாரிகள் மேற்கொள்வர்.
நாகராஜ்
அழைப்பிதழில் சுதாகர் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் அவர்கள் இருவர் இடையிலும் சிக்கிக்கொண்டு அதிகாரிகள் தவிக்க போவது உறுதி.
இதற்கு முன்பு சிக்கபல்லாபூர் எம்.பி.,யாக இருந்த பச்சே கவுடாவுக்கும், முன்னாள் அமைச்சர் நாகராஜுக்கும் இடையில் பிரச்னை இருந்ததால், நாகராஜை சில அரசு நிகழ்ச்சிகளுக்கு பச்சே கவுடா அழைக்கவில்லை. அந்த நிகழ்ச்சிகளுக்கு தானாக சென்று, நாகராஜ் பிரச்னை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.