பா.ஜ., கவுன்சிலரின் கணவர் சுட்டு கொலை
பா.ஜ., கவுன்சிலரின் கணவர் சுட்டு கொலை
பா.ஜ., கவுன்சிலரின் கணவர் சுட்டு கொலை
ADDED : ஜூன் 17, 2024 04:19 AM
விஜயபுரா : கொலை வழக்கில் கைதாகி பரோலில் வந்த, பா.ஜ., பெண் கவுன்சிலரின் கணவர், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
விஜயபுரா சடசனா டவுனில் வசித்தவர் அசோக் மல்லப்பா, 45; பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உட்பட பல வழக்குகள், சடசனா போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
ஒரு கொலை வழக்கில் கைதாகி, விஜயபுரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பரோலில் வெளியே வந்தார்.
நேற்று காலை பைக்கில், நிரோகி சாலையில் சென்றார். அப்போது, அங்கு காரில் வந்த மூன்று பேர், அசோக்கின் பைக்கை வழிமறித்தனர். திடீரென அசோக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது மார்பு, தோள்பட்டையில் தோட்டாக்கள் துளைத்தன. சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர்.
அசோக்கை கொன்றது யார், என்ன காரணம் என தெரியவில்லை. முன்விரோதத்தில் எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள், கொன்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சடசனா போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலையான அசோக்கின் மனைவி சடசனா, பட்டண பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலராக உள்ளார்.