ஐ.ஏ.எஸ்., ஆக வந்த மகள்: சல்யூட் அடித்து வரவேற்ற தந்தை
ஐ.ஏ.எஸ்., ஆக வந்த மகள்: சல்யூட் அடித்து வரவேற்ற தந்தை
ஐ.ஏ.எஸ்., ஆக வந்த மகள்: சல்யூட் அடித்து வரவேற்ற தந்தை
ADDED : ஜூன் 17, 2024 02:49 AM

ஹைதராபாத்: தெலுங்கானா போலீஸ் அகாடமிக்கு ஐ.ஏ.எஸ்., ஆக பயிற்சி பெற வந்த தன் மகளுக்கு அகாடமியின் துணை இயக்குனர் எஸ்.பி., வெங்கடேஷ்வரலு, சல்யூட் அடித்து வரவேற்பு தந்த புகைப்படம் இணையத்தில் பரவியது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்மாநில போலீஸ் அகாடமி உள்ளது. இந்த அகாடமியின் துணை இயக்குனராக போலீஸ் எஸ்.பி., வெங்கடேஷ்வரலு பொறுப்பு வகிக்கிறார். இவரது மகள் உமா ஹாரத்தி ஐ.ஏ.எஸ்., ஆக தேர்ச்சி பெற்று தற்போது பயிற்சி அதிகாரியாக உள்ளார்.
ஐ.ஏ.எஸ்., பயிற்சியின் ஒரு பகுதியாக இவர்கள் மாநில போலீஸ் அகாடமியில் சில நாட்கள் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சியின் வாயிலாக போலீஸ் அகாடமியின் பங்கு, பயிற்சி முறை மற்றும் போலீசாரை பணிக்கு தயார்படுத்துவதில் உள்ள பிற முக்கிய அம்சங்கள் குறித்த அனுபவத்தை பயிற்சி ஐ.ஏ.எஸ்.,கள் பெறுவர்.
இதற்காக நேற்று தெலுங்கானா மாநில போலீஸ் அகாடமிக்கு பயிற்சி ஐ.ஏ.எஸ்., உமா ஹாரத்தி வந்தார். அவரை அவரது தந்தையும், போலீஸ் அகாடமியின் துணை இயக்குனருமான எஸ்.பி., வெங்கடேஷ்வரலு சல்யூட் அடித்து பெருமையுடன் வரவேற்றார். பின் இருவரும் போலீஸ் அகாடமி நிகழ்வில் சக அதிகாரிகளுடன் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தந்தையர் தினமான நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.