Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்: அமித்ஷா திட்டவட்டம்

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்: அமித்ஷா திட்டவட்டம்

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்: அமித்ஷா திட்டவட்டம்

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்: அமித்ஷா திட்டவட்டம்

UPDATED : ஜூன் 16, 2024 06:05 PMADDED : ஜூன் 16, 2024 11:52 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் தொடரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உள்துறை அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்ற கடந்த 10ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அடுத்ததாக, ஜம்முவின் தோடா மாவட்ட குடியிருப்பு பகுதி, கதுவா மாவட்ட ராணுவ முகாம்களையும் பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், துணை ராணுவப் படை வீரர் ஒருவர் பலியானார். இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் நடந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அது தொடர்பாக டில்லியில் உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடந்தது. பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உள்துறை அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us