கேரளாவில் மார்க்., கம்யூ., பிரசாரத்தால் பா.ஜ.,வுக்கு பலன்; முஸ்லிம் லீக் சொல்கிறது
கேரளாவில் மார்க்., கம்யூ., பிரசாரத்தால் பா.ஜ.,வுக்கு பலன்; முஸ்லிம் லீக் சொல்கிறது
கேரளாவில் மார்க்., கம்யூ., பிரசாரத்தால் பா.ஜ.,வுக்கு பலன்; முஸ்லிம் லீக் சொல்கிறது
UPDATED : ஜூன் 16, 2024 10:29 AM
ADDED : ஜூன் 16, 2024 10:00 AM

கோழிக்கோடு: சமீபத்திய லோக்சபா தேர்தலில் மார்க்.,கம்யூ கட்சியின் முஸ்லிம் விரோத போக்கும், பிரசாரமும் பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது என கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி ஷஹாப் தங்கல் கூறியுள்ளார்.
இவரது கட்சி பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள அவரது கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது: கேரளாவில் பா.ஜ., ஓட்டுச்சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து அனைத்து தரப்பினரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். திருச்சூரில் பா.ஜ., தனது கணக்கை துவக்கி இருக்கிறது.
சிபிஐஎம் இரட்டை வேடம்
இதற்கெல்லாம் காரணம் ஆளும் மார்க்.,கம்யூ கட்சியின் பிரசாரம் தான். முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில பிரசார யுக்தி நடந்தது. இவர்கள் இல்லை என்றால் முஸ்லிம்கள் மக்கள் இரண்டாம் தரமாக்கப்படுவார்கள் என்பது நகைச்சுவையாக உள்ளது. சிபிஐஎம் இரட்டை வேடம் பா.ஜ., வெற்றிக்கு அடிகோலுகிறது. முத்தலாக் தடை சட்டம், பொது சிவில் சட்டம், லவ்ஜிகாத் போன்றவை முதன்முதலில் இவர்களால் தான் வலியுறுத்தப்பட்டது. கேரளாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்தார்கள். இது போன்ற செயல்கள் பா.ஜ.,வுக்கு வெற்றியை தருகிறது. கம்யூ., மதச்சாய அரசியல் செய்கிறது. இவ்வாறு சாதிக் அலி கூறினார்.