ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ.,வுக்கு தாவல்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ.,வுக்கு தாவல்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜ.,வுக்கு தாவல்
ADDED : ஜூலை 10, 2024 11:34 PM
புதுடில்லி:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய இருவரும் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
டில்லி சத்தர்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.எ., கர்தர் சிங் தன்வார், படேல் நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ராஜ்குமார் ஆனந்த் மற்றும் அவரது மனைவி வீணா ஆனந்த் ஆகியோர், பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் அருண் சிங் ஆகியோர் மூவரையும் வரவேற்று பேசினர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆனந்த், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இருந்தும் விலகினார்.