காபு மாரிகுடி கோவிலில் சூர்யகுமார் யாதவ் வழிபாடு
காபு மாரிகுடி கோவிலில் சூர்யகுமார் யாதவ் வழிபாடு
காபு மாரிகுடி கோவிலில் சூர்யகுமார் யாதவ் வழிபாடு
ADDED : ஜூலை 10, 2024 04:39 AM

உடுப்பி, : தன் மனைவி தேவிஷா ஷெட்டியுடன், பாபு மாரிகுடி கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று, சிறப்பு வழிபாடு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ், 33. கடந்த மாதம் 29ம் தேதி நடந்த, இந்தியா- - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி ஆட்டத்தில், சூர்ய குமார் யாதவ் பிடித்த அபாரமான கேட்சால் இந்தியா கோப்பையை வென்றது.
இதனால் சூர்ய குமார் யாதவ் மவுசு அதிகரித்துள்ளது. இவருக்கு நேற்று முன்தினம் 8வது திருமண நாள்.
மனைவி தேவிஷா ஷெட்டியுடன் நேற்று முன்தினம் காலை மங்களூரு விமான நிலையம் வந்த, சூர்யகுமார் யாதவ், விமான நிலையத்தில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினார். பின்னர் இருவரும் மங்களூரில் தங்கினர்.
நேற்று காலை மங்களூரில் இருந்து காரில் புறப்பட்டு, உடுப்பி காபு மாரிகுடி மாரியம்மா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
கோவில் நிர்வாக அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். தரிசனம் முடிந்ததும் அங்கிருந்து மங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.
காபு மாரிகுடி மாரியம்மன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த, சூர்யகுமார் யாதவ் -- தேவிஷா ஷெட்டி தம்பதி. இடம்: உடுப்பி.