குடிசை பகுதியினருக்கு இலவச கொசு வலை
குடிசை பகுதியினருக்கு இலவச கொசு வலை
குடிசை பகுதியினருக்கு இலவச கொசு வலை
ADDED : ஜூலை 10, 2024 04:40 AM
பெங்களூரு, : ''டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, குடிசைப்பகுதிகளில் வசிப்போருக்கு இலவசமாக கொசு வலை வழங்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் இதுவரை 7,362 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளன. இதில், 303 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
குடிசை பகுதி மக்களுக்கு இலவசமாக கொசு வலை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொசு அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் கொசு வலை வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும், டெங்கு சிகிச்சைக்கு சிறப்பு வார்டு ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ கல்லுாரிகளிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட அளவில் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு அமைக்கவும்; மழைக்காலம் முடியும் வரை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்.
பணியில் அலட்சியம் காட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் கூட உயிரிழக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.