சோனியா, சுனிதாவுடன் சோரன் தம்பதி சந்திப்பு
சோனியா, சுனிதாவுடன் சோரன் தம்பதி சந்திப்பு
சோனியா, சுனிதாவுடன் சோரன் தம்பதி சந்திப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:18 PM
புதுடில்லி:ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை நேற்று சந்தித்தனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு வழக்கில் ஜனவரி 31ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பே, முதல்வர் பதவியை ஹேமந்த் ராஜினாமா செய்தார்.
ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்துக்கு, கடந்த 4-ம் தேதி ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்த வந்த அவர், மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா முர்மு சோரன் ஆகிய இருவரும் தலைநகர் டில்லிக்கு நேற்று வந்தனர்.
பார்லிமென்ட் காங்கிரச் கட்சித் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் இருவரும் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தனர். அப்போது, ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் உடனிருந்தார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காததால் கெஜ்ரிவால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.