ADDED : மார் 14, 2025 12:29 AM
தார், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பத்னாவார் - உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு, 'காஸ்' ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.
பமன்சுதா கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மற்றும் ஜீப் மீது, அந்த லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜீப்பில் சென்ற மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் மீட்கப்பட்ட மூவர், அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.