ADDED : மார் 14, 2025 12:28 AM

85 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!
வினாத்தாள் கசிவு நம் நாட்டு மாணவர்களுக்கு பெரும் ஆபத்தான விஷயமாக மாறி உள்ளது. சமீபத்திய வினாத்தாள் கசிவால் ஆறு மாநிலங்களில், 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. கடின உழைப்பை விட நேர்மையற்ற செயலே சிறந்தது என்ற தவறான செய்தியை இது கடத்துகிறது.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
காங்கிரசுக்கு கசக்கிறது!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் எங்கேயும் குறிப்பிடவில்லை. அதற்கான அறிகுறியும் இல்லை. அவருக்கு என்று சில கருத்துக்கள் உள்ளன. அவர் சராசரி அரசியல்வாதி இல்லை. சில சமயங்களில் அவர் உண்மையைப் பேசுகிறார். அது காங்கிரசுக்கு கசப்பாக உள்ளது.
பிரகாஷ் காரத்
ஒருங்கிணைப்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்!
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் ஹோலி பண்டிகைக்கு இலவச சிலிண்டர் வழங்கவில்லை என, ஆம் ஆத்மி போராட்டத்தில் ஈடுபடுகிறது. டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்து சில நாட்களே ஆகியுள்ளன. அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் அரசு நிறைவேற்றும்.
மனோஜ் திவாரி
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,