Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

ADDED : ஜூன் 15, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
சபரிமலை:ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஜூன் 19 வரை பூஜைகள் நடக்கும்.

நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஸ்ரீ கோயில் நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் 18 படிகள் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று (ஜூன் 15) அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.

தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிசேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை நடைபெறும். மாலை தீபாராதனைக்கு பின் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஜூன் 19 வரை இதுபோல பூஜைகள் நடந்து அன்றிரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us