Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெண் அர்ச்சகர் பூஜை செய்யும் ருத்ராஞ்சனேயர்

பெண் அர்ச்சகர் பூஜை செய்யும் ருத்ராஞ்சனேயர்

பெண் அர்ச்சகர் பூஜை செய்யும் ருத்ராஞ்சனேயர்

பெண் அர்ச்சகர் பூஜை செய்யும் ருத்ராஞ்சனேயர்

ADDED : ஜூலை 29, 2024 08:32 PM


Google News
Latest Tamil News
பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும், ஆண்களே அர்ச்சகர்களாக இருப்பது வழக்கம். ஆனால் உத்தரகன்னடாவில் பிரம்மச்சாரி கடவுளான ஆஞ்சனேயருக்கு, பெண் அர்ச்சகர் பூஜை செய்கிறார்.

ஆண் தெய்வங்கள் மட்டுமின்றி, பெண் தெய்வங்கள் குடிகொண்டுள்ள கோவில்களிலும், ஆண்களே அர்ச்சகராக இருப்பது வழக்கம். பூஜை, வழிபாடுகள் நடத்துவர். பெண் அர்ச்சகரை காண்பது அபூர்வம். சிர்சியின் கோவில் ஒன்றில், பெண் அர்ச்சகர் பணியாற்றுகிறார்.

ஆஞ்சனேயர் சுவாமி 'கட்டை பிரம்மசாரி'. இவரை பெண்கள் தொடக்கூடாது என்பது ஐதீகம். ஆனால் ஆஞ்சனேயர் கோவிலில், பெண் அர்ச்சகர் பூஜைகள் செய்வது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தரகன்னடா, சிர்சியின் கானசூரில் ருத்ராஞ்சனேயர் கோவில் அமைந்துள்ளது. கங்காதரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராமானந்த அவதுாதரு உட்பட பல சுவாமிகளின் துாண்டுதலால், ருத்ராஞ்சனேயர் கோவில் கட்டப்பட்டதாம்.

இங்கு சாவித்ரம்மா என்பவர் அர்ச்சகராக பணியாற்றுகிறார். தேங்காய் வியாபாரியாக இருந்த இவருக்கு, கோவில் அர்ச்சகராக ஆஞ்சனேயருக்கு பூஜை செய்யும் அதிர்ஷ்டம் கிடைத்ததே, ஒரு சுவாரஸ்யமான கதை.

சாவித்ரம்மாவின் பூர்வீகம் கானகாபுரா கிராமம். பிழைப்பு தேடி சிர்சிக்கு வந்த இவர், தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். அந்த வகையில் சித்தாபுரா, முன்டகோடு, பனவாசி என பல்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.

ஒருநாள் இவரது கனவில் தோன்றிய ஆஞ்சனேயர், தனக்கு கோவில் கட்டும்படி கட்டளையிட்டார். அதை நிறைவேற்ற சாவித்ரம்மா, கோவில் கட்ட தகுதியான இடம் தேடினார். இந்த சூழ்நிலையில், எதிர்பாரா விதமாக இவருக்கு, கானசூரில் கதம்பர் ஆட்சி காலத்து ஆஞ்சனேயர், சிவன், பார்வதி, விநாயகர், இரண்டு கல்வெட்டுகள் கிடைத்தன.

இவற்றை வைத்து, பலரின் ஒத்துழைப்புடன் 2003ல் கோவில் கட்ட துவங்கினார். 2015ல் முடிந்தது. ஆஞ்சனேயருக்கு சாவித்ரம்மாவே பலவிதமான பூஜை, கைங்கர்யங்களை செய்கிறார். 65 வயதிலும் ஆன்மிக சேவையில் ஈடுபட்டு, அடுத்த சந்ததியினருக்கு ஊக்கமளிக்கிறார். பயபக்தியுடன், விரதங்களை கடைபிடிக்கிறார்

.- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us