Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தமிழக -- கர்நாடக பக்தர்கள் தரிசனம் செய் யு ம் 'ராமேஸ்வரர் கோவில்'

தமிழக -- கர்நாடக பக்தர்கள் தரிசனம் செய் யு ம் 'ராமேஸ்வரர் கோவில்'

தமிழக -- கர்நாடக பக்தர்கள் தரிசனம் செய் யு ம் 'ராமேஸ்வரர் கோவில்'

தமிழக -- கர்நாடக பக்தர்கள் தரிசனம் செய் யு ம் 'ராமேஸ்வரர் கோவில்'

ADDED : ஜூலை 29, 2024 08:29 PM


Google News
Latest Tamil News
கர்நாடகா -- தமிழக மாநில எல்லையில் உள்ளது சாம்ராஜ்நகர் மாவட்டம். சாம்ராஜ்நகரில் இருந்து 28 கி.மீ., தூரத்தில் உள்ளது நரசமங்களா கிராமம்.

இந்த கிராமத்தில் 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரர் கோவில் உள்ளது. நாட்டிலுள்ள பழமையான கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று.

கோவில் சிறியதாக இருந்தாலும் கட்டடக்கலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. கருவறையில் பிரமாண்ட சிவலிங்கம் உள்ளது. கருவறை கதவில் மலர்கொடிகள் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலின் நடு மண்டபத்தில் இருந்து மேல் நோக்கி பார்த்தால், உள் கூரையில் புவனேஸ்வரில் உள்ள இரண்டாவது நடராஜரின் சிற்பம் தெரியும்.

இந்த சிற்பத்தை சுற்றி எட்டு சதுரங்களில் அஷ்டதிக் பாலர்கள், சிவபெருமானை வழிபடும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் பின்பக்கம் வராகி, சாமுண்டி, வைஷ்ணவி தேவிகளின் சிலையும் உள்ளது.

இது தவிர விநாயகர், கார்த்திகேயன், சூரிய பகவான், தலையில் பாம்பு எழுந்தருளிய நிலையில் பார்ஸ்வநாத் தீர்த்தங்கரர் சிலைகளும் உள்ளன.

பழமையான கோவில் என்பதால், இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.

இக்கோவிலில் 'மஹா சிவராத்திரி' வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இரு மாநில எல்லையில் கோவில் அமைந்திருப்பதால், தமிழகத்தின் ஈரோடு, சத்தியமங்கலம், பவானி, தாளவாடி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு திரளாக வந்து வழிபடுகின்றனர்.

எப்படி செல்வது?

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு வருகின்றனர். தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து நரச மங்களா கிராமம் 195 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. காரில் சென்றால் மூன்றரை மணி நேரம் ஆகிறது. பஸ், ரயிலில் செல்வேர், சாம்ராஜ்நகர் சென்று, அங்கிருந்து கோவிலைச் சென்றடையலாம்.



--- நமது நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us