ரோகித் 'சரவெடி'.. இந்தியா வெற்றிக்கொடி: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது
ரோகித் 'சரவெடி'.. இந்தியா வெற்றிக்கொடி: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது
ரோகித் 'சரவெடி'.. இந்தியா வெற்றிக்கொடி: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது

ரோகித் விளாசல்
இந்திய அணிக்கு கோலி (0) ஏமாற்றினார். ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் எட்டினார். ரிஷாப் பன்ட் (15) நிலைக்கவில்லை. ஸ்டார்க் 'வேகத்தில்' ரோகித் (92) அவுட்டானார். சூர்யகுமார் (31), துபே (28) ஓரளவு கை
ஹெட் அபாரம்
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (6) ஏமாற்றினார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் கேப்டன் மார்ஷ். பும்ரா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ஹெட், பாண்ட்யா வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். குல்தீப் 'சுழலில்' மார்ஷ் (37) சிக்கினார். பாண்ட்யா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹெட், 24 பந்தில் அரைசதம் எட்டினார். மேக்ஸ்வெல் (20), ஸ்டாய்னிஸ் (2) சோபிக்கவில்லை. பும்ரா பந்தில் ஹெட் (76) அவுட்டானார்.
ஆஸி., நிலை என்ன
'சூப்பர்-8' சுற்றுக்கான 'பிரிவு-1'ல் மூன்று போட்டியிலும் வென்ற இந்தியா (6 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (தலா 2 புள்ளி) உள்ளன.