ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டு கதவில் துப்பாக்கி சூடு
ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டு கதவில் துப்பாக்கி சூடு
ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டு கதவில் துப்பாக்கி சூடு
ADDED : ஜூலை 02, 2024 10:27 PM
புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் ரியல் எஸ்டே நிறுவன உரிமையாளர் வீட்டின் கதவில் துப்பாக்கியால் சுட்ட இருவரை போலீசார் தேடுகின்றனர்.
வெல்கம் காலனி கபீர் நகரில் வசிப்பவர் ஆரிப் அலி, 38. ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்.
நேற்று முன் தினம் இரவு 8:48 மணிக்கு ஸ்கூட்டரில் வந்த இருவர், ஆரிப் வீட்டுக் கதவில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின், அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து, போலீசில் ஆரிப் அலி கொடுத்துள்ள புகாரில், “சில நாட்களுக்கு முன் மொபைல் போனில் அழைத்த ஒருவர் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.
“இப்போது என் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்,”என, கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், துப்பாக்கிக் குண்டுகளைக் கைப்பற்றினர்.
மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.