நீதித்துறைக்கு முழு ஆதரவு அமைச்சர் அதிஷி பேச்சு
நீதித்துறைக்கு முழு ஆதரவு அமைச்சர் அதிஷி பேச்சு
நீதித்துறைக்கு முழு ஆதரவு அமைச்சர் அதிஷி பேச்சு
ADDED : ஜூலை 02, 2024 10:27 PM

புதுடில்லி,:“முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு நீதித்துறைக்கு தேவையான ஆதரவை வழங்கும்,” என, டில்லி சட்டத் துறை அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
தலைநகர் டில்லியில் கர்கர்துாமா, சாஸ்திரி பார்க் மற்றும் ரோகினி 26வது செக்டார் ஆகிய இடங்களில் நீதிமன்ற வளாகங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கர்கர்துாமாவில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் செங்கல் வைத்து கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், டில்லி சட்டத் துறை அமைச்சர் அதிஷி சிங் பேசியதாவது:
கடந்த காலங்களில் டில்லி அரசின் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014- - 2015ம் ஆண்டில் 760 கோடி ரூபாயா இருந்த நீதித்துறைக்கான நிதி படிப்படியாக அதிகரித்து, 2024- - 2025ம் ஆண்டு பட்ஜெட்டில் 3,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்ற கட்டடங்கள் அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையையும் நீதிக்கான நம்பிக்கையையும் பிரதிபலிக்கும். இந்த மூன்று நீதிமன்ற வளாகங்ன்களும் 1,100 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணைநிலை கவர்னர் சக்சேனா, “இந்த மூன்று நீதிமன்ற வளாகங்களிலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் சூரியஒளி மின்சாரம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட பசுமைக் கட்டிடங்களாக கட்டி முடிக்கப்படும். நாட்டின் தலைநகரான டில்லியில் நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்,”என்றார்.