இரண்டு என்கவுன்டர்களில் ஒருவர் சுட்டு கொலை மற்றொருவர் காயத்துடன் பிடிபட்டார்
இரண்டு என்கவுன்டர்களில் ஒருவர் சுட்டு கொலை மற்றொருவர் காயத்துடன் பிடிபட்டார்
இரண்டு என்கவுன்டர்களில் ஒருவர் சுட்டு கொலை மற்றொருவர் காயத்துடன் பிடிபட்டார்
ADDED : ஜூலை 02, 2024 10:28 PM
மீரட்:ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த குற்றவாளி, உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரில் நேற்று நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனு சவானி என்கிற சுமித் சிங். இவர் மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
துப்பாக்கி சண்டை
தலைமறைவாக உள்ள சுமித் சிங் குறித்து தகவல் தெரிவித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என உ.பி., அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலீஸ் இணைந்து பத்லாபூரில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, போலீசுக்கும் சுமித் சிங்குக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், சுமித் சிங்கை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சுமித் சிங் மீது காஜிபூர், பலியா மற்றும் ஜான்பூர் மாவட்டங்களிலும், பீஹார் மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் 24 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பத்லாபூரில் சுமித் சிங் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததால் நேற்று அங்கு அதிரடி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் சுமித் சிங்குடன் இருந்த அவரது கூட்டாளிகள் இருவர் தப்பி ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற ஏ.கே.-47 ரக இயந்திரத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர். இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
மீரட்டில் பசுவதை உட்பட 11 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ஷதாப் என்ற சுஹா, சுஹைல் கார்டனில் பதுங்கி இருந்தார்.
தகவல் கிடைத்து அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஷதாப்பின் காலில் குண்டு பாய்ந்தது.
சுற்றிவளைத்துக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.