பிரதீப் ஈஸ்வர் ராஜினாமா பிரதாப் சிம்ஹா கிண்டல்
பிரதீப் ஈஸ்வர் ராஜினாமா பிரதாப் சிம்ஹா கிண்டல்
பிரதீப் ஈஸ்வர் ராஜினாமா பிரதாப் சிம்ஹா கிண்டல்
ADDED : ஜூன் 04, 2024 11:13 PM

பெங்களூரு: ''இன்னும் சில மணி நேரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் ராஜினாமா செய்வார்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பா.ஜ.,வில் சுதாகர், காங்கிரசில் பிரதீப் ஈஸ்வர் போட்டியிட்டனர்.
இதில் பிரதீப் ஈஸ்வர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற நாளில் இருந்தே, இவர் சுதாகரை பற்றி கிண்டலாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில், சுதாகரை வேட்பாளராக பா.ஜ., அறிவித்த போது, பிரதீப் ஈஸ்வர் விமர்சித்தார்.
'சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாத சுதாகர், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவாரா. சிக்கபல்லாபூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா வெற்றி பெறுவது நிச்சயம். எங்கள் வேட்பாளரை விட, சுதாகர் ஒரு ஓட்டு அதிகம் பெற்றாலும், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன்' என சவால் விடுத்தார்.
தற்போது சுதாகர் 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பிரதீப் ஈஸ்வர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இது குறித்து, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், 'சவால் விடுத்ததை போன்று, இன்னும் சில மணி நேரங்களில் எம்.எல்.ஏ., பதவியை, பிரதீப் ஈஸ்வர் ராஜினாமா செய்வார்' என கிண்டல் செய்து உள்ளார்.