காங்., கொண்டாட்டத்தில் பாக்., ஆதரவு கோஷம்
காங்., கொண்டாட்டத்தில் பாக்., ஆதரவு கோஷம்
காங்., கொண்டாட்டத்தில் பாக்., ஆதரவு கோஷம்
ADDED : ஜூன் 04, 2024 11:12 PM
சிக்கோடி: சிக்கோடியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா வெற்றி கொண்டாட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா. லோக்சபா தேர்தலில் சிக்கோடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை சிக்கோடியில் ஒரு ஓட்டு சாவடி முன், காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் 'பிரியங்கா ஜார்கிஹோளி, பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய நபரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் கண்டறிந்தனர். அவரை பிடிப்பதற்குள் அங்கு வந்த, பெலகாவி செல்லும் பஸ்சில் ஏறி தப்பினார்.
பஸ்சை பின்தொடர்ந்து சென்ற போலீசார், பெலகாவியில் வைத்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜமிர் நைக்கவாடி என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடக்கிறது.
கடந்த பிப்ரவரியில் நடந்த, ராஜ்யசபா எம்.பி., தேர்தலின்போது, காங்கிரஸ் வேட்பாளர் சையது நாசிர் உசேன் வெற்றியை, விதான் சவுதாவில் ஆதரவாளர்கள் கொண்டாடினர். அப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, கோஷம் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.