தற்காலிக ஆசிரியர்கள் 45,000 பேர் நியமிக்க அனுமதி
தற்காலிக ஆசிரியர்கள் 45,000 பேர் நியமிக்க அனுமதி
தற்காலிக ஆசிரியர்கள் 45,000 பேர் நியமிக்க அனுமதி
ADDED : ஜூன் 04, 2024 11:14 PM
பெங்களூரு: அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக 45,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இல்லாவிட்டால், மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், தேவைக்கு ஏற்ப தொடக்க பள்ளிகளுக்கு, 35,000 ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிக்கு 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய், உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
தற்போது உயர்நிலைப் பள்ளியில், 8,954 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. படிப்படியாக காலியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.