துணை முதல்வர் சிவகுமாருடன் பி.கே.யு., தலைவர் ஆலோசனை
துணை முதல்வர் சிவகுமாருடன் பி.கே.யு., தலைவர் ஆலோசனை
துணை முதல்வர் சிவகுமாருடன் பி.கே.யு., தலைவர் ஆலோசனை
ADDED : ஜூலை 07, 2024 03:13 AM
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, பாரதிய கிசான் கூட்டமைப்பு தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டகாயத் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பி.கே.யு., எனும் பாரதிய கிசான் கூட்டமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத், 55. இவரது தந்தை மகேந்திரசிங் திகாயத்தும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவராக, அடையாளம் காணப்பட்டவர்.
ராகேஷ் திகாயத், விவசாயிகளின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துபவர். இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில், இவரும் ஒருவராவார். இவர் பெங்களூருக்கு வருகை தந்துள்ளார்.
சதாசிவநகரில் உள்ள, துணை முதல்வர் சிவகுமாரின் வீட்டுக்கு, அவர் நேற்று காலை சென்றிருந்தார். கர்நாடகாவின் சில விவசாய சங்கங்களின் தலைவர்களும் உடன் வந்திருந்தனர். பாரதிய கிசான் யூனியன் சங்கம் சார்பில், தேசிய அளவிலான மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி, துணை முதல்வருக்கு, அவர் அழைப்பு விடுத்தார்.
ராகேஷ், துணை முதல்வர் வீட்டில் இருந்தபோது, முதல்வர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் இருந்தனர்.
ராகேஷ், முதல்வரை சந்திக்காமல், துணை முதல்வரை மட்டும் சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகி உள்ளது.