Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நீச்சல் குளத்தில் குளித்த அமைச்சர்  தினேஷ் குண்டுராவை விமர்சித்த பா.ஜ.,

நீச்சல் குளத்தில் குளித்த அமைச்சர்  தினேஷ் குண்டுராவை விமர்சித்த பா.ஜ.,

நீச்சல் குளத்தில் குளித்த அமைச்சர்  தினேஷ் குண்டுராவை விமர்சித்த பா.ஜ.,

நீச்சல் குளத்தில் குளித்த அமைச்சர்  தினேஷ் குண்டுராவை விமர்சித்த பா.ஜ.,

ADDED : ஜூலை 07, 2024 03:13 AM


Google News
மங்களூரு: நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட, அமைச்சர் தினேஷ் குண்டுராவை, பா.ஜ., விமர்சித்துள்ளது.

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், தனது பொறுப்பான, தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மங்களூரு நகர் ஹெம்மேகெரே பகுதியில் அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட நீச்சல் குளத்திற்கு, தினேஷ் குண்டுராவ் சென்றார். நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டார்.

இதற்காக அவரை பா.ஜ., விமர்சித்துள்ளது.

'நகரங்கள் முழுவதும் அசுத்தம் நிறைந்து டெங்கு பரவி வரும் நிலையில், கர்நாடக அரசு நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கிறது. நீரில் சுகாதார துறையின் நீரோ ராவ்' என, பா.ஜ., 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பா.ஜ., -- எம்.எல்.சி., செலுவாதி நாராயணசாமி அளித்த பேட்டியில், ''மாநிலத்தில் டெங்கு பாதிப்பால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இவர்களெல்லாம் வேலை செய்யவில்லை. லுாட்டி அடைகின்றனர். முதல்வர் ராஜினாமா செய்தால் அனைத்தும் சரியாகும்,'' என்றார்.

பா.ஜ., ஆட்சியின்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அப்போது சுகாதார அமைச்சராக இருந்த சுதாகர், நீச்சல் குளத்தில் தனது குடும்பத்தினருடன் குளித்த புகைப்படம் வெளியானது.

இதை வைத்து சுதாகரையும், பா.ஜ.,வையும், காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us